Friday, 3 March 2023

பனி பொழியும் அந்தியில் நான் நின்ற கானகம் (Stopping by Woods on a Snowy Evening) by Robert Frost

எவருடைய கானகம் இது

என்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

அவருடைய வீடு கிராமத்தில் இருந்தது.

பனி மூடியிருந்த அவரது காட்டைக் கண்டுகளிக்க

நான் வந்து நின்றது

அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

 

அடர் மரங்களுக்கும்

உறைந்துபோன ஏரிக்கும் இடையில்

தங்குமிடம் எதுவும் கண்ணில் தென்படாத இடத்தில்

வருடத்தின் இருண்டு போன மாலைவேளையில்

அங்கே நான் வந்து நின்றது

என்னை சுமந்து வந்த குதிரையையும் குழப்பியிருக்கும்.

 

நான் தவறுதலாக அங்கே நின்றுவிட்டேனா

என்பதை உறுதிப்படுத்த சேணத்தின் மணியை

ஒரு முறை ஒலித்துப் பார்த்தது.

பனியின் துகள் வீழும் சத்தத்தையும்

மென்மையாக வீசிய காற்றின் ஓசையையும் தவிர

வேறெந்த சத்தமும் அங்கில்லை.

 

இருண்மையோடும், ஆழத்தோடும்

கண்டு களிக்க கானகம் மிக அழகாகவே இருக்கிறது

ஆனால் ….

எனக்காகக் காத்திருக்கும் கடமைகள் அனேகம்.

ஓய்வுக்கு முன் நான் பயணிக்க வேண்டிய தூரமும் மிக அதிகம்

ஓய்வுக்கு முன் நான் பயணிக்க வேண்டிய தூரமும் மிக அதிகம்.

 

---ராபர்ட் ஃப்ராஸ்ட்.

(Source: Robert Frost’s famous poem “Stopping by Woods on a Snowy Evening”)