Wednesday, 7 September 2022

மலைகளுக்கு வெள்ளை யானைகளைப் பிடிக்கும் (“Hills like White Elephants”)- எர்னெஸ்ட் ஹெமிங்க்வே

எப்ரோ ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கு அப்பால் இருந்த அந்த மலைகள் நீளமாகவும் வெண்மை நிறத்துடனும் இருந்தனஇந்தப் பக்கம் எந்த நிழலும் இல்லைமரங்களும் இல்லைஅங்கிருந்த வெட்ட வெளியில் இரண்டு இரயில் பாதைகளுக்கு இடையே புகைவண்டி நிலையம் அமைந்து இருந்ததுஅந்த நிலையத்துக்கு பக்கவாட்டில் கதகதப்பாக கட்டிடத்தின் நிழல் படிந்திருந்ததுஈக்களை விரட்டுவதற்காக மூங்கில்களைக் கொண்டு நிரல் நிரலாகச் செய்யப்பட்ட திரை ஒன்று ஓய்வறையின் திறந்த வாசலின் குறுக்கே தொங்கிக் கொண்டு இருந்ததுகட்டிடத்தின் வெளிப்புறத்தில் பரவிய நிழலில் இருந்த மேசையில் அந்த அமெரிக்கனும் அவனுடைய தோழியும் அமர்ந்தார்கள்.  வெயில் தகித்துக் கொண்டிருந்ததுபார்சிலோனாவில் இருந்து வரும் புகைவண்டி இன்னும் நாற்பது நிமிடங்களில் அங்கு வந்து சேரும்இந்த நிலையத்தில் அவ்வண்டி இரண்டு நிமிடங்கள் நின்று பின்னர் மாட்ரிட் நகரை நோக்கி செல்லும்.

என்ன சாப்பிடலாம்என்று அந்தப் பெண் கேட்டாள்தனது தொப்பியைத் தலையில் இருந்து     கழற்றி முன்னால் இருந்த மேசையின் மீது வைத்தாள்.

வெயில் ரொம்ப கடுமையாக இருக்கு” என்றான் அவன்.

நாம் பீர் சாப்பிடலாம்

இரண்டு பீர்” என்று திரையினூடே பார்த்து ஸ்பானிஷ் மொழியில் சொன்னான் அவன்.

பெரியதுதானே?” வாசலுக்கு அருகில் நின்றவாறு கேட்டாள் ஒரு பெண்.

ஆமா..ரெண்டுமே பெரிதுதான்

இரண்டு பீர் பாட்டில்களையும்இரண்டு சிறு மேசை விரிப்புகளையும் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணிபீர் பாட்டில்களையும் விரிப்புகளையும் மேசை மீது வைத்துவிட்டு  அந்த மனிதனையும் அவனுடைய தோழியையும் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள் அவள்அவனுடைய தோழி எங்கோ தூரத்தில் தெரிந்த மலைகளின் விளிம்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  சூரிய ஒளியில் அந்த மலைகள் வெண்மையாகத் தெரிந்தனஅந்த ஊரோ பழுப்பு நிறத்திலும் காய்ந்து போனதுமாகவும் காணப்பட்டது.  

அந்த மலைகள் வெள்ளை யானைகளைப் போல தோற்றமளிக்கின்றன” என்று சொன்னாள் அவள்.

அப்படி எதையும் நான் பார்த்ததேயில்லை” என்று பீரைக் குடித்தவாறு சொன்னான் அவன்.

இல்லைநீ பார்த்திருக்க வாய்ப்பில்லை

நான் பார்த்தும் இருக்கலாம்” என்றான் அவன். “நான் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நீ சொல்வதனால் மட்டும் எதுவும் நிரூபணம் ஆகிவிடாது

நிரலாகத் தொங்கிய அந்தத் திரையை அவள் பார்த்தாள். “இதில் ஏதோ வரைந்து இருக்கிறார்கள்” என்று சொன்னாள் அவள். “இதற்கு என்ன அர்த்தம்?”

அனிஸ் டெல் டோரோஅது ஒரு மது வகை

அதைக் குடித்துப் பார்க்கலாமா?”

அந்த மனிதன் திரையினூடே கூப்பிட்டான். “இங்கே கொஞ்சம் வர முடியுமா?”. ஓய்வறையில் இருந்து அந்தப் பெண்மணி வெளிப்பட்டாள்.

மொத்தம் நான்கு ரியால்கள்

எங்களுக்கு இரண்டு அனிஸ் டெல் டோரோ வேண்டும்

நீர் கலந்தா?”

உனக்கு அதனோடு நீர் கலந்து சாப்பிடப் பிடிக்குமா?”

அது எப்படி இருக்குமோ தெரியலயே!.” என்றாள் அவள். “நீர் கலந்தால் அது நன்றாக இருக்குமா?

நல்லாத்தான் இருக்கும்

உங்களுக்கு அதில் நீர் கலந்து வேண்டுமா?” என்று கேட்டாள் அந்தப் பெண்மணி.

ஆமாநீர் கலந்து கொண்டு வாங்க

இதன் சுவை அதிமதுரம் போல இருக்குது”-ஓரு மிடறு குடித்துவிட்டு கண்ணாடி பாட்டிலை கீழே வைத்தவாறு சொன்னாள் அவள்.

இதே மாதிரிதான் எல்லாமே இருக்கும்

ஆமாஎல்லாமே அதிமதுரம் போலத்தான் இருக்குகுறிப்பாக நாம் ஒரு விஷயத்திற்காக வெகு காலம் காத்திருந்தோமேயானால்அதாவது சுவைமிக்க பழமையான மதுவைப் போல

கொஞ்சம் நிறுத்து

நீதானே ஆரம்பிச்சேநான் சும்மா கிண்டலுக்குச் சொன்னேன்எனக்குக் கொஞ்சம் சந்தோசமாக இருக்க நேரம் கிடைத்து இருக்கிறது இல்லையா?”

நல்லதுசந்தோசமான நேரம் கிடைக்க நாமும் முயற்சி செய்வோம்

சரி …நானும் முயற்சி செய்துகொண்டு இருந்தேன்இந்த மலைகள் எல்லாம் வெள்ளை யானைகள் போலத் தோற்றமளிக்கின்றன என்று சொன்னேனேஅவை நல்லா பிரகாசமா இருக்கிறதல்லவா?”

பிரகாசமாத்தான் இருக்கு

இந்த புதிய மதுவைக் குடித்துப்பார்க்க விரும்பினேன்அவ்வளவுதான் நம்மால் செய்ய முடியும்இல்லையா”- எதையாவது பார்த்துக்கொண்டு நிற்பதுஏதாவது புதிய ரக மதுவை அனுபவித்துப் பார்க்க விழைவது…”

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.”

அவனுடைய தோழி எட்ட இருந்த அந்த மலைகளைப் பார்த்துகொண்டு நின்றாள்.

அவை ரம்மியமான மலைகள்” என்றாள் அவள். “அவை வெள்ளை யானைகள் போல தோற்றம் அளிக்கவில்லைதான்மரங்களின் ஊடே தெரியும் அவற்றின் தோல் நிறத்தைப் பற்றித்தான் நான் குறிப்பிட்டேன்இன்னும் கொஞ்சம் குடிக்கலாமா?”

குடிக்கலாமே

கதகதப்பாக வீசிய காற்று மூங்கில் திரையை மேசையின் மீது அடித்துக் கொண்டு இருந்தது.

பீர் சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது” என்றான் அவன்.

இது ரொம்ப அழகு” என்று சொன்னாள் அவள்.

உண்மையிலேயே அது மிகவும் சுலபமான ஓர் அறுவை சிகிச்சைதான்ஜிக்சொல்லப்போனால் அதை அறுவை சிகிச்சையே இல்லை” என்றான் அவன்.

மேசையின் கால்கள் ஊன்றி இருந்த தரையை வெறித்துப் பார்த்து கொண்டு இருந்தாள் அவள்.

நீ அதைப் பற்றி ஒன்றும் நினைக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும்ஜிக்அது ஒன்றுமே இல்லைசும்மா காற்றை உள்ளே தள்ளுவது மட்டும்தான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.

நான் உன்னோடு வருவேன்எப்போதும் உன்னோடு இருப்பேன்அவர்கள் வெறும் காற்றை உன்னுள் செலுத்துவார்கள்அப்புறம் எல்லாமே அட்சரசுத்தமா ஒன்றுமே நடக்காத மாதிரி இயல்பா முடிந்து விடும்

அதுக்கு அப்புறம் நாம் என்ன செய்வோம்?”

அதுக்கப்புறம் நாம் நல்லாத்தான் இருப்போம்முன்பு இருந்த மாதிரி

ஏது உன்னை இப்படி நினைக்க வைக்குது?”

இந்த ஒன்றுதானே நம்மை கவலைக்குள்ளாக்கி கொண்டு இருக்கிறதுஇந்த ஒன்றுதானே நம்மை மகிழ்ச்சியே இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறது.”

அவள் அந்த மூங்கில் திரையைப் பார்த்தாள்கையை வெளியே நீட்டி அந்த மூங்கில் நிரலில் இரண்டு உருண்டைகளைப் பற்றினாள்.

எல்லாம் சரியாகிவிடும்நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்று நினைக்கிறாய்.”

நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்று எனக்குத் தெரியும்நீ பயப்படத் தேவை இல்லைஇந்த மாதிரி பண்ணிகொண்ட பல பேரை எனக்குத் தெரியும்.”

ஆக நானும் அப்படித்தான்அதுக்கு அப்புறம் அவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்அப்படித்தானே

நல்லதுஉனக்கு விருப்பமில்லை என்றால் நீ அதை செய்து கொள்ள வேண்டியது இல்லைஉனக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் அதை செய்யச் சொல்லி உன்னை நான் கேட்க மாட்டேன்ஆனால் அது மிகவும் சுலபமான விஷயம் என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.”

ஆக அதை நீ நிஜமாகவே விரும்புகிறாய்

செய்து கொள்வதென்றால் அது ஒரு சிறந்த காரியம் என்றுதான் சொல்வேன்ஆனால் உனக்கு இஷ்டமில்லையென்றால் அதை நீ செய்வதை நான் விரும்ப மாட்டேன்.”

அதை நான் செய்துகொண்டால் நீ சந்தோசப்படுவாய்முன்பு எப்படி எல்லாம் இருந்ததோ அதது அப்படியே இருக்கும்நீயும் என்னை நேசிப்பாய்?”

இப்போதும் உன்னை நான் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்நான் உன்னை நேசிப்பது உனக்கு தெரியும். “

எனக்குத் தெரியும்தான்இருந்தாலும் அதை நான் செய்து கொண்ட பின் இது இந்த வெள்ளை யானை மாதிரி இருக்கிறது என்று எதையாவது உளறிக்கொண்டு இருப்பேன்அது உனக்கு பிடிக்குமா?”

எனக்கு அது பிடிக்கும்இப்போதும் அது பிடித்துதான் இருக்கிறதுஆனால் அதைப்பற்றி என்னால் நினைக்க முடியவில்லை என்றேன்நான் கவலைப்பட்டால் நான் எப்படி நடந்துகொள்வேன் என்பது உனக்குத் தெரியும்.”

நான் அதை செய்து கொண்டால் நீ கவலைப்படவே மாட்டாய்அப்படித்தானே?”

எனக்கு அந்த விஷயத்தைப்பற்றி கவலை ஏதும் இலைகாரணம் அது மிகவும் சுலபமான காரியம்.”

அப்படியென்றால் அதை நான் செய்து கொள்கிறேன்ஏனென்றால் எனக்கு என்னைப் பற்றி கவலை இல்லை.”

நீ என்ன சொல்கிறாய்?”

என்னைப் பற்றி எனக்குக் கவலை இல்லை

நல்லதுஉன்னை பற்றிய கவலை எனக்குண்டு

சரிஉண்மைதான்ஆனாலும் என்னைப் பற்றி எனக்குக் கவலை இல்லைஅதை நான் செய்து கொள்கிறேன்அதற்கு அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்

இந்த மாதிரி நீ பேசினால் நீ அதை செய்து கொள்ள வேண்டாம் என்பேன்

அவள் எழுந்து நின்றாள்புகைவண்டி நிலையத்தின் கடைசி வரை நடந்தாள்அதற்கு அப்பால்அந்தப் பக்கம் எப்ரோ நதிக்கரையில் வயல்வெளிகளும் மரங்களுமாகத் தென்பட்டனஅதைத் தாண்டி மிக தூரத்தில் ஆற்றுக்கு அப்பால் அந்த மலைகள் இருந்தனவயல் வெளிகளை தழுவியவாறு மேகக்கூட்டம் ஒன்றின் நிழல் கடந்து சென்றதுமரங்களின் ஊடே அவள் ஆற்றினைப் பார்த்தாள்.

இவை எல்லாவற்றையும் நாம் அடையலாம்எல்லாவற்றையும் நாம் அனுபவிக்கலாம்ஒவ்வொரு நாளும் அதை அடைய விடாமல் நாம் செய்து கொண்டு இருக்கிறோம். “ என்றாள் அவள்.

நீ என்ன சொன்னாய்?”

நாம் இவை எல்லாவற்றையும் அடைய முடியும் என்று சொன்னேன்

எல்லாவற்றையும் நம்மால் அடைய முடியுமா?”

இல்லைநம்மால் முடியாது

இந்த ஒட்டு மொத்த உலகையும் நம்மால் அடைய முடியும்

 “இல்லைநம்மால் முடியாது

எங்கு வேண்டுமானாலும் நம்மால் செல்ல முடியும்

இல்லைநம்மால் முடியாதுஇனிமேல் அது யாவும் நம்முடையது அல்ல

அது நம்முடையதுதான்.”

இல்லைஅது நம்முடையது இல்லைஒரு தடவை அவர்கள் பறித்துக் கொண்டால் மீண்டும் அதை அடைய நம்மால் முடியாது

ஆனால் அவர்கள் எதையும் பறித்துக் கொள்ளவில்லையே

நாம் காத்திருந்து பார்க்கலாம்

இந்தப்பக்கம் நிழலுக்கு வா” என்றான் அவன். “நீ அந்த மாதிரி நினைக்கக் கூடாது.”

நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லைஎனக்கு சில விஷயங்கள் புரியும்.”

உனக்கு விருப்பமில்லாத ஒன்றை நீ செய்தாக வேண்டும் என்று நான் விரும்ப மாட்டேன்

எனக்கும் அது நல்லதில்லை என்று எனக்குத் தெரியும்இன்னொரு பீர் சாப்பிடலாமாஎன்று கேட்டாள் அவள்.

நல்லதுஆனாலும் நீ கொஞ்சம் புரிந்து கொள்ள வெண்டும்…..”

எனக்குப் புரிகிறதுநாம் பேசுவதைக் கொஞ்சம் நிறுத்திக் கொள்வோமா?” என்று கேட்டாள் அவள்.

அவர்கள் மேசையில் அமர்ந்தார்கள்பள்ளத்தாக்கின் காய்ந்துபோன பரப்பில் விரிந்துகிடந்த மலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள் அவள்.  அவன் அவளையும்அவள் இருந்த மேசையையும் பார்த்துக்கொண்டு இருந்தான்.

உனக்குப் புரிய வேண்டும்உனக்கு விருப்பம் இல்லாத ஒன்றை நீ செய்ய வேண்டும் என்று நான் விரும்ப மாட்டேன்அது உனக்கு ஏதேனும் ஒரு பயனைத் தரும் என்றால் அதில் முழுமனதுடன் செயல்பட எனக்கு விருப்பமுண்டு.” என்றான் அவன்.

உனக்கு அதில் பங்கிருக்கிறதுஅது உண்மைதானேநாம் சேர்ந்து இருக்கலாம்.”

கண்டிப்பாக இருக்குஆனால் ஒன்றுஎனக்கு உன்னைத் தவிர வேறு எவரும் தேவை இல்லைவேறு யாரும் எனக்கு வேண்டாம்அது மிகவும் சுலபமான காரியம் என்பது எனக்குத் தெரியும்.”

ஆமாம்அது மிகவும் சுலபமான விஷயம் என்பது உனக்குத் தெரியும்.”

நீ அப்படி சொல்லிக் கொள்வது உனக்கு சரியெனத் தோன்றலாம்ஆனால் எனக்கு அது தெரியும்.”

இப்ப எனக்காக உன்னால் ஒன்று செய்ய முடியுமா?”

உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்

தயவு செய்துதயவு செய்துதயவு செய்துதயவு செய்துதயவு செய்துதயவு செய்துதயவு செய்து நீ கொஞ்சம் பேசாமல் இருக்க முடியுமாப்ளீஸ்

அவன் ஒன்றும் சொல்லாமல் புகைவண்டி நிலையத்தின் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான்அவர்கள் இரவுகளைக் கழித்த ஹோட்டல்களின் அடையாள வில்லைகள் அந்தப் பைகளில் ஆங்காங்கே ஒட்டி இருந்தன.

ஆனால் உன்னை வற்புறுத்த எனக்கு விருப்பம் இல்லை……எனக்கு அதை பற்றி ஒரு கவலையும் இல்லை... “ என்றான் அவன்.

நான் கத்துவேன்” என்றால் அவள்.

திரையின் ஊடே இருந்து கையில் இரண்டு பீர் பாட்டில்களுடன் அந்தப் பெண்மணி வெளியே வந்தாள்ஈரமாக இருந்த மேசை விரிப்பின் மீது அவற்றை வைத்தாள். “வண்டி இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்துவிடும்” என்று கூறிச் சென்றாள்.

அவள் என்ன சொன்னாள்?”

வண்டி இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்துவிடுமாம்

இவனுடைய தோழி அந்தப் பெண்மணியைப் பார்த்து நன்றி சொல்வதைப் போல பிரகாசமாக சிரித்தாள்.

நான் இந்தப் பைகளை எல்லாம் தூக்கிக்கொண்டு ஸ்டேஷனின் அந்தப் பக்கம் போகிறேன்” என்றான் அவன்அவனைப் பார்த்து அவள் புன்னகைத்தாள்.

சரிபோய் வச்சுட்டு வாசேர்ந்தே பீரை குடிச்சு முடிக்கலாம்.”

கனமாக இருந்த அந்த இரண்டு பைகளையும் அவன் எடுத்துக்கொண்டான்அவற்றை சுமந்து கொண்டு அந்தப் பக்கம் இருந்த ரயில் பாதையை நோக்கிச் சென்றான்ரயில் பாதையை நோக்கினான்ரயில் வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லைதிரும்பி வந்தான்ரயிலுக்காக காத்திருந்தவர்கள் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த அந்த ஓய்வறையைக் கடந்து சென்றான்அவனும் ஓர் அனிஸ் குடித்தபடி அங்கிருந்தவர்களைப் பார்த்தான்அவரகள் எல்லோரும் வண்டி வரத்தான் போகிறது என்ற நம்பிக்கை தொனித்த விதத்தில்தான் காத்துக் கிடந்தார்கள்மூங்கில் உருண்டை திரையை விலக்கிக்கொண்டு அவன் சென்றான்அவள் மேசையில் அமர்ந்திருந்தாள்அவனைப் பார்த்து  சிரித்தாள்.

இப்ப உனக்குக் கொஞ்சம் பரவாயில்லையா?” என்று கேட்டான் அவன்.

நான் நல்லா இருக்கேன்எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைநான் நல்லாத்தான் இருக்கேன்” என்றாள் அவள்.

 

                                                             ***** End *****

 

ஆங்கில மூலம்: Ernest Hemingway’s short story “Hills like White Elephants”

தமிழில்சரவணன்கா