நான் எவருமில்லை! நீ யார்?
நீயும் எவருமில்லையோ?
அப்படியென்றால்
நாம் நல்லதொரு ஜோடிதான்.
எவரிடமும் சொல்லிவிடாதே.
உனக்கே தெரியும்.
விளம்பரப்படுத்தி விடுவார்கள்.
யாரோவாக இருப்பது
எவ்வளவு பயங்கரம்?
சேறும் சகதியும் என்னைப் புகழும்
என்பதற்காக
வாழ்கின்ற நாளெல்லாம்
தவளையைப்போல்
என் பெயர் சொல்லிக் கத்துவது
என்ன ஒரு அபத்தம்!
-----------------
Source:
Emily Dickenson’s “I’m No body. Who are you?”
In Tamil:
Saravanan. K