Friday, 24 March 2023

நான் உன்னைக் காதலித்தேன் (I Loved you) by Alexander Pushkin

நான் உன்னைக் காதலித்தேன்

இன்னும் காதலித்துக் கொண்டுதான்

இருக்கிறேன்.

உருப்பெற்ற உணர்வுகள்

இன்னும் கொஞ்ச காலம்

இறவாமல் இருக்கும்.

ஆனால் கவலைப்படாதே!

என்னுடைய காதல்

என்றும் உன்னைத் தொந்தரவு செய்யாது.

உன்னுடைய வலிக்கு

நான் காரணமாவதை

நான் என்றுமே விரும்பியதில்லை.

 

நான் உன்னைக் காதலித்தேன்;

விரக்தியுமாய்

பொறாமையுமாய்

வெட்கமுமாய்

 

இறைவனிடம்

ஒரு வேண்டுதல் உண்டு எனக்கு.

இப்போது இல்லையென்றாகி விட்ட

மென்மையான,

உண்மையான

காதல் ஒன்றினால்

நீ.

மீண்டும் ஒருமுறை

நீ காதலிக்கப்பட வேண்டும்.

………

Source: Alexander Pushkin’s “I Loved you”

In Tamil : Saravanan. K


No comments:

Post a Comment