நான் உன்னைக் கொன்றுவிட்டதாக
நீ சொன்னாய்.
அப்படியென்றால்
பேயாக வந்தாவது என்னைத்
தீண்டிவிட்டு போ.
என்னைப் பைத்தியமாக்கும்
எந்த உருவத்தில்
நீ வந்தாலும்
எனக்குப் பயமில்லை.
உன்னிடம் நான் வேண்டுவது
ஒன்றே ஒன்றுதான்.
நான் உன்னை கண்டுபிடிக்க
முடியாத
நரகம் ஒன்றில்
தன்னந்தனியாக மட்டும்
என்னைத் தள்ளிவிட்டுச் சென்று
விடாதே.
---------------
Source: A
conversation from “Wuthering Heights”, a novel written by Emily Brontë
In Tamil :
Saravanan. K
No comments:
Post a Comment